அல்லாஹ் என்றால் சந்திர கடவுளா

Tamil • MyIslam24

கேள்வி:: அல்லாஹ் என்றால் "சந்திர கடவுளா" (Moon God)

 
பதில்

படத்தை பார்த்தும் மீடியாவை பார்த்தும் இஸ்லாத்தை கற்றால்,  இவ்வாறாக தவறான புரிதல் வருவது இயல்பே!!

திருக்குர்ஆன் "சூரிய சந்திர வணக்கம்" குறித்து என்ன சொல்கிறது என பார்ப்போம்.

இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய (இறைவனின்) அத்தாட்சிகளில் (Signs of God) உள்ளவைதாம். ஆகவே, நீங்கள்  வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனையும்  சந்திரனையும்  வணங்காதீர்கள்  - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் . (அல்குர்ஆன் : 41:37)

வணங்குதல் என்பது அது என்னையும்,உங்களையும், இந்த பிரபஞ்சத்தையும் படைத்தவனுக்கு உரியதாகும்..

நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன் என்றால்,  பாராட்டுகளை புத்தகத்திற்கு சொல்வதா?  எழுதியவரிடம் சொல்வதா?

சூரியனும் . சந்திரனுமா கடவுள்?

சூரியனும் சந்திரனும் ஒரு படைப்பு அல்லவா!! அவைகள் குறிப்பிட்ட காலத்தில் அழியக்கூடியது அல்லவா ⁉ என்றாவது ஓர் நாள் அழியக்கூடியவை தான் இவைகள் என்பதை அறியும்போதே நாம் விளங்கிக்கொள்ள வேண்டாமா

அவைகள் வணக்கத்துக்குரியது அல்ல என !!

நம் பிரபஞ்சத்தில் மட்டும் 50 பில்லியன் (50,000,000,000) சூரியன் உள்ளன, நமது பால்வீதியிலுள்ள வியாழனில் (Jupiter) 63 நிலா உள்ளன. இப்படியிருக்கிற அனைத்தும் படைப்புகளே!! ஒரு நாள் அழியக்கூடியவையே. நம்மை படைத்த படைப்பாளன் தான் அழிவில்லாதவன்.

என்றும் வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே அவனே நிலைத்திருப்பவன்

படைப்புகளை வணங்காதீர்கள்

படைத்தவனை வணங்குங்கள்

இதை தான் இஸ்லாம் சொல்கிறது,  மீடியா மூலம் இஸ்லாத்தை கற்றால் இது போன்ற முறண்பாடான கருத்துகளை தான் கற்க முடியும். திருக்குர்ஆனை படியுங்கள்.