ஜிஹாத் என்றால் என்ன?
ஜிஹாத் என்றவுடனே இன்று முஸ்லிமல்லாத மக்களிடம் ஒரு தவறான எண்ணம் விதைக்கப்பட்டுள்ளதுஜிஹாத் என்றால் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களை கொல்வது
முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் புரிவது
பிறரை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தை திணிப்பது
என பல்வேறு விதமான பொய்களை திணித்துள்ளனர்.
உண்மையில் ஜிஹாத் என்பதன் பொருள் என்ன தெரியுமா
கடுமையாக முயற்ச்சித்தல் என்பதே
இஸ்லாமிய மார்க்கம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ன தெரியுமா
எந்த நிலையிலும் படைத்தவனையே வணங்கவேண்டும்
பெற்றோர்களுக்கு நோவினை செய்யக்கூடாது,அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். [அவர்கள் இஸ்லாத்தை ஏற்றாலும்,ஏற்காவிட்டாலும் சரியே]
உங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்.அவர்களுக்கான உரிமைகளை வழங்கி விடுங்கள்
உறவுகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அதனை விட்டு விலகி விடாதீர்கள்.
அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு பிடிக்காதவர்களாக இருப்பினும் அவர்களிடம் நியாயமாகவே நடந்து கொள்ளுங்கள்
உங்கள் வியாபரத்தினில் மோசடி செய்யாதீர்கள்
ஏழைகளுக்கும்,அனாதைகளுக்கும் உணவளியுங்கள்,ஆதரியுங்கள்
நன்மையை ஏவுங்கள்✌,தீமையை தடுங்கள்
கசப்பாக இருப்பினும் உண்மையே பேசுங்கள்
அநீதிக்கு எதிராக போராடுதல்.
நன்மையை ஏவி, தீமையை தடுத்தல்.
இப்படி இஸ்லாமிய வாழ்க்கை முறையை இத்தரணியில் மேலோங்கச் செய்து இறை உவப்பைப் பெறுவதற்காக வேண்டி பாடுபடுவதும் அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதுதான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த ஜிஹாத்.
நமது வாழ்விலும் நாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதுதான் ஜிஹாத்.
இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும்.
இவ்வுலகில் முதல் கட்டமாக மனிதன் தன் மனத்துடன் போராடி, மனஇச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதும் ஜிஹாத் . இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என அண்ணலார் (ஸல்) தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
ஆக, மனத்துடன் போராடி மன இச்சைகளை வீழ்த்தி நமது உள்ளத்தில் இறையாட்சியை நிறுவுவதுதான் மிகப்பெரிய ஜிஹாத் ஆகும்.
“இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள்.மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்” (அல்குர்ஆன் 3:110)
நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் . இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும் .
(நூல்: முஸ்லிம்)
கொடுங்கோள் ஆட்சியாளனின் முன் உண்மையை எடுத்துரைப்பது மாபெரும் அறப்போர் ஆகும். – முஹம்மது நபி ஸல்