பர்தா குறித்த கேள்விகளும் பதில்களும்

Tamil • MyIslam24

பர்தா குறித்த கேள்விகளும் பதில்களும்

ஒரு நண்பர் வாட்ஸ் ஆப்பில் கேட்ட கேள்விகளையும் அதற்கான பதிலையே கீழே தந்துள்ளோம்.

கேள்வி : பெண்கள் மட்டும் புர்கா அணிய வேண்டும் எனக்கூறும் நண்பர்கள் ஆண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை புறக்கணிப்பு செய்வது ஏன் !!
கருப்பு உடை வெப்பத்தை அதிகம் உள் கிரகிக்கும் தன்மை கொண்டது ! why ladies has to wear such a colored dress in hot tropical countries
உணர்வை தூண்டும் அங்கங்களை மறைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உடல் முழுமையையும் மறைக்க வேண்டிய அவசியம் என்ன. உணர்வை தூண்டும் ஆடை சார்ந்த காரணிகள் சமூகம் , கலாச்சாரம், தேசம் என பல விசயங்களைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது. உதாரணமாக ( நான் பார்த்த வகையில்)ஒரு தமிழ்ப் பெண் அணிவதற்கு என உள்ள கலாச்சார உடை அணிந்த பெண்ணை, பெண்மைக்கான குணங்கள் கொண்ட பெண்ணை, ஒவ்வொரு தமிழனும் மதிக்கிறான் . அதே வகையில் மேற்கத்திய உடைகள் மேற்கத்திய நாகரிக நாடுகளில் சரியே ! . நம்மவர்கள் போல அந்த தேசத்தவர்கள் இடைவெளி களில் தெரியும் உடல் பாகங்களை உற்றுப்பார்த்து உணர்ச்சி வசப்படுவதும் இல்லை. என்னுடைய பொதுக்கருத்து என்னவென்றால். அந்தந்த கலாச்சாரத்தில் என்ன உடை அங்கீகரிக்கப் பட்டிருக்கிறதோ. அதை அணிந்தால் பிரச்சனையே இல்லை

பதில்:: அருமையான கேள்வி தானே நம் சகோதரர் கேட்டுள்ளது !!

////////////// பெண்கள் மட்டும் ஆடை அணியவேண்டும் என கூறும் நண்பர்கள், ஆண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை புறக்கணிப்பது ஏன்??? ///////////
கட்டுப்பாடு என எதை சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. ஆண்களுக்கும் (ஹிஜாப்/Dress Code) ஆடை வரையறை உண்டு, எவ்வாறு பெண்கள் இறுக்கமான மெல்லிய வேறு பாலினத்தை கவரும் வகையில் ஆடை அணியக்கூடாதோ, அதே போல் தான் ஆண்களுக்கும்.

அதுபோக, பர்தா/ஹிஜாப் என்று சொன்னால், கருப்பு நிறத்தில் வெளியில் போடுகிற ஆடை என்று எண்ணக்கூடாது, (கருப்பு நிறத்தை அணிவது மிக தவிர்ப்பது நல்லது இந்த வெயிலுக்கு. இதையும் எங்கள் மக்களிடம் (தனிநபர்களிடமும், பொதுவாகவும் ) சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஹிஜாப் என்பது அது Dress Code ஐ (உடையணியும் விதத்தை) குறவிதத்தை. ஆக எந்த நாட்டை சேர்ந்த, எந்த கலாச்சாரத்தை சேர்ந்த பெண் ஆயினும் ஆண் ஆயினும் இறுக்கமாகவோ மெல்லிய துணிய (Transparent) , பிற பாலினத்தை கவரும் வண்ணம் ஆடை அணிவது கூடாது. அது போக பர்தா என்ற பெயரில இறுக்கமாக ஆடை அணிந்திருப்பதை பார்த்திருக்கலாம், ஆனால் அதுவும் தவறே, அது ஹிஜாப் அல்ல!!

உதாரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லிம் பெண், சுடிதாரை இறுக்கமாகவும், மெல்லிய ஆடையோடும் Transparent ஆகவும், போடாமல் கண்ணியமாக பிறரை கவறாத வண்ணம் உடை அணிந்தாலே அது போதுமானது. அமெரிக்காவிலோ துருக்கியில் இருப்பவர்களோ அவர்களது கலச்சாரத்திற்கு ஏற்ற துணியை இவ்வாறான வழிக்காட்டுதலின் படி அணிந்திருப்பார்கள், இது தானே அனைவருக்கும் நல்லது. மனிதனுக்கு எது நன்மை பயக்குமோ அதை தானே செய்யச் சொல்கிறது இஸ்லாம்,

இது ஒரு பக்கம் இருக்க, இப்போது இருக்கும் நம் கலச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றமுடியாது தானே!! இப்போது உள்ள கலாச்சாரமோ ,ஷால் கூட போடாமல் டி-சர்ட் அணிவதும், லெக்கின்ஸ் அணிவதும், முதுகு தெரிவது போல் ஜன்னல் கதவு வைத்து ஜாக்கெட் வைப்பது என்றெல்லாம் ஆகிவிட்டது, இடுப்பு தெரிவது போல் புடவை கட்டுவது, இடுப்பு தெரிந்தால் என்ன? தப்பில்லையே என்று தோனும் அளவுக்கு சாதாரணமாகிவிட்டது. இடுப்பு கவர்ச்சிகரமான பகுதி இல்லையா? இன்னும் அமெரிக்காவின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, கோவா வின் சரி, டூ பீஸ் அணிவது, மார்பு தெரிவது போல் அணிவது சர்வசாதாரணம் , அவர்கள் கலாச்சாரத்தை பின்பற்றட்டும் என சொல்வோமா பிரதா், அதனால் தான் அங்கு நிமிடத்திற்கு பல பாலியல் வன்கொடுமைகள். இது போன்ற ஆடை ஆண்களை ஈர்க்காதா?

சேலையும் அணிவதை எடுத்துக் கொள்வோம். வண்டியில் பின் அமர்ந்து சென்றால் இடுப்பும் மார்பு பகுதியும் தெரிவதை கூட அறியாமல் செல்வது தவறுதானே, இன்னும் சூடிதார் ஐ எடுத்துக் கொண்டால், காற்று அடித்தால் மேலுள்ள ஆடை எப்போது தூக்கும் என (கல்லூரிகளில்) சில மாணவர்கள் நினைத்து காத்திருப்பது பல மாணவ இளைஞர்கள் அறிவர். இன்னும் காற்றுக்கு பயந்து சுடிதாரை பிடித்துக் கொண்டு செல்வதை கொண்டு புரிந்துக் கொள்ளவேண்டாமா? இன்னும் பேருந்தில் (Bus) சுடிதாரோடு உட்கார்ந்தால், பேருந்தின் நகர்வின் மூலம் மார்பகங்கள் தெரிவது, இது போன்றவற்றை வீடியோ பிடித்து இணையத்தில் நாசமாக்குகிறார்களே , சிந்திக்கவேண்டாமா??

நான் எல்லா கலாச்சாரத்தை குறை சொல்வதற்காக இவற்றையெல்லாம் சொல்லவில்லை, அவர்கள் தத்தமது கலாச்சாரத்தின் படி உடை அணியட்டும் என சொல்வது தவறு என நினைக்கிறேன், அணிந்திருக்கும் ஆடை, உறுப்புகள் தெரிவது போல் ஈர்ப்பது போல் அணியக்கூடாது என சொல்கிறேன், இன்னும் சில முஸ்லிம் பெண்களை பார்த்திருக்கலாம், நீளமான இறுக்கமில்லாத சுடிதாரை போட்டு தலையில் Scarf போட்டிருப்பார்கள், குனிய நேரிட்டால் கூட தெரியாது அல்லவா, இதுவே ஹிஜாப்.

மேலைநாட்டவர்கள் கிடைக்கும் கோணங்களில் பெண்களை பார்த்து ரசிப்பதில்லை என சொன்னீர்கள் பிரதா், ஆனால் ஏனோ பாலியல் குற்றங்களில் டாப் லிஸ்ட் ல் வருகிறாா்கள் என புரியவில்லை. (According to RAIIN, Every 107 seconds, someone in the United States is sexually assaulted. There is an average of 293,000 victims (age 12 or older) of sexual assault each year. 68% of sexual assaults are not reported to the police. 98% of rapists will never spend a day in jail.)

(According to George Mason University, Worldwide Sexual Assault Statistics, 1 in 3 American women will be sexually abused during their lifetime. About 19.3% of women have been raped at least once in their lives. Additionally, an estimated 43.9% of women experienced other forms of sexual violence during their lifetimes. Many victims of sexual abuse were victimized at a young age, about 79% were first raped before age 25, and 40% before age 18. ( usatoday ).)

இன்னும் சொல்லப்போனால், நான் ஜுப்பா அணிவதலாம் கிடையாது, உங்களை போல ஷர்ட் ம் ஜீன்ஸ் ம் தான் அணிகிறேன் (ஜீன்ஸ் தமிழ் கலாச்சாரமா என தெரியவில்லை) ஆனால் கீழ் உள்ளாடை தெரிவது போல் Low Hip அணிவது கூடாது என்பதை எளிதாக புரிந்துக் கொள்ளலாம், அதே நோரத்தில், அல் குர் ஆனில் இறைவன் முதலில் ஹிஜாபை ஆணுக்கு கடமையாக்குகிறான் என்ன தெரியுமா அது ?

" பார்வைகளை தாழ்த்த வேண்டும் , இச்சையோடு எந்த பெண்ணையும் பார்க்ககூடாது என அல்லாஹ் ஆண்களுக்கு கட்டளை இடுகிறான் ( 24:30 )

உதாரணமாக ஒரு பெண் சாமியாரை எடுத்துக் கொள்வோம், அவர் இடுப்பு முதுகு தெரியும் வண்ணம் உடை அணியமாட்டார்கள், அது போல கணணியாஸ்திரி அப்படியே. இவர்கள் மற்றவர்களை விட உயர்ந்த அந்தஸத்திலே பார்க்கபடுகிறாா்கள், ஆனால் இஸ்லாத்தில் அனைவரும் சமம் ,அனைவருமே பிறரை கவரும் வண்ணம் ஆடை அணியக்கூடாது என்கிறது.

ஆக இஸ்லாம் கலாச்சாரத்தை மாற்றுவதற்காக இவையெல்லாம் சொல்லவில்லை, அனைவரின் நன்மைக்கே!! கலாச்சாரம் என்பது மாறிக் கொண்டே தான் இருக்கும் , அதில் எவற்றை சிறந்த முறையில் அணிய முடியுமோ அதை அணிவது சரியானது என நான் நினைக்கிறேன்.

என் புரிதலின் படி விளக்க முயர்சித்துள்ளன். நனறி.