உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனைகளுக்கு இங்குள்ள முஸ்லிம்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும் ?
உலகில் எந்த இடத்தில் அரச பயங்கர வாதம் இருக்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதம் இருக்கத்தான் செய்யும்! ஒரு சாரார் உரிமைகள் மறுக்கப்பட்டு
ஒடுக்கப் பட்டால் அங்கு ஆயுதப் போராட்டம் வெடிக்கத் தானே செய்யும்! உலகெங்கும் அரச பயங்கர வாதத்திற்கு எதிராக ஆயுதக் குழுக்களின் பதிலடி நடந்து கொண்டு தான் இருக்கின்றன! ஆனால் அவைகளுக்காக
சம்மந்தப்பட்ட சமூகங்கள் மீது குற்றம் சாட்டுவதில்லை! ஒரு முஸ்லிம் செய்யும் காரியம் மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த படுகிறது! இதில் உலகை ஆளும் யூத பார்ப்பன மீடியாக்களின் பங்கு உள்ளது!
பிரான்ஸ் அமேரிக்கா, ரஷ்யா போன்ற வல்லாதிக்க நாடுகளால் சிரியாவில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்படுவதை எந்த ஊடகமும் காட்டததால் அது சிறியதாகவும் , பிரான்சில் 138 பேர் படுகொலையை ஊடகங்களில் காட்டியதால் அது பெரியதாகவும் உலகத்தை உச்சுக் கொட்ட வைக்க ஊடகங்களால் முடிகிறது!
அவர்கள் எங்கிருந்தோ இருந்து வந்து அவர்கள் நாட்டில் விமானங்கள் மூலம் குண்டு வீசிக் கொல்கிறார்கள் !
இவர்கள் அவர்கள் நாட்டில் சென்று உடலில் குண்டைக் கட்டிக் கொண்டு தானும் செத்து பிறரையும் கொல்கிறார்கள்!
ஏன் இவர்கள் தன்னுயிரை விட்டு பிறரைக் கொல்கிறார்கள்! எனும் காரணத்தை கண்டறிந்து தீர்க்காமல் இந்தக் காரியங்களை நிறுத்த முடியாது!
வல்லாதிக்க நாடுகளின் ஆயுத விற்பனைக்காக , வளங்களுக்காக பிற நாடுகளை அபகரிக்கும் மேலாண்மை இருக்கும்வரை இவை தொடரத்தான் செய்யும்!
பிரான்சில் நடந்த தாக்குதல் பெரிதாக உலக ஊடகங்களில் காட்டப்படுகிறது ! அன்றாடம் பிரான்ஸ் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் சிரியாவில் நடத்தும் தாக்குதல்கள் கண்டுகொள்ளப் படுவதில்லை! அங்கு கொல்லப்படுபவர்கள் மனிதர்கள் இல்லையா ? தினமும் விமானத்தில் இருந்து குண்டு வீசிக் கொன்றால் அது ராணுவ நடவடிக்கை ! பாதிக்கப்பட்டவன் திருப்பி அடித்தால் தீவிரவாத நடவடிக்கையா ?
இதில் இஸ்லாத்தை தொடர்பு படுத்தி முஸ்லிம்களை
தீவிரவாதிகளாக் காட்டும் வல்லாதிக்க நாடுகளின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளவேண்டும்!
ஜப்பானிலும் வியட்நாமிலும், இரு உலகப் போர்களிலும், ஆப்கானிலும் இராக்கிலும் அமெரிக்கா நடத்திய கோடிக்கணக்கான கொலைகளுக்கு கிறிஸ்தவம் தொடர்பில்லை! அதற்காக கிறிஸ்தவர்கள் யாரும் வெட்கப்படவில்லை!
இஸ்ரேல் இன்றுவரை பாலஸ்தீனத்தில் நடத்திய படு கொலைகளுக்கு யூத மதம் தொடர்பில்லை! அதற்காக யூதர்கள் யாரும் வெட்கப்படவில்லை!
பர்மாவிலும் இலங்கையிலும் நடந்த படுகொலைகளுக்கு பவுத்தம் தொடர்பில்லை! அதற்காக பவுத்தர்கள் யாரும் வெட்கப் படவில்லை!
காந்தி முதல் கல்புர்கி வரை, குஜராத் முதல் உபி வரை பாகல்பூர் முதல் முசாபர் நகர்வரை சங்பரிவார் நடத்திய படுகொலகளுக்கு இங்குள்ள இந்துக்களோ மோடியோ வெட்கப்படவில்லை ! பதில் சொல்ல வில்லை!
ஆனால் உலகில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் செய்து விட்டால் இங்குள்ள முஸ்லிம்கள் குற்றவாளிகள் போல் ஊடகங்களால் விரல் நீட்ட படுவதும், அதற்கு நாம் கூனிக்குறுகி நிற்பதும் ஏன்?
நாங்கள் தீவிரவாதி இல்லை எங்களை நம்புங்கள்! எங்களை நம்புங்கள் ! எங்களைக் கட்டியனையுங்கள் என வீதிகளில் நின்று கெஞ்சுவதேன்!
இதற்கு காரணம் நாம் பின்பற்றும் இந்த இஸ்லாம் தான்! இஸ்லாத்தை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் குர்ஆனையும், கொண்டு வந்த தூதரையும் குற்றம் சுமத்தி அதில் குறை காண முடியாத காரணத்தால் அதில் தோற்று போய் , அதைத் பின்பற்றும் முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கும் முயற்சி தான் இன்றைய நிலைக்கு காரணம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்!
மேலும் அவர்கள் நடத்துவதை மார்கத்துக்கான போராகப் பார்த்தால்தான் அதற்கு நாம் பதில் சொல்லவேண்டும் ! அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்! அவர்களின் மண்ணுக்கான போராகப் பார்த்தால் எந்தப் பிரச்னையுமில்லை !
அரச பயங்கரவாதம் இருக்கும் வரை தீவிரவாதமும் இருக்கும் ! நீங்கள் விமானத்தில் குண்டு போட்டு அவர்கள் மக்களைக் கொன்றால் அவர்கள் மனிதவெடி குண்டாக மாறி உங்கள் மக்களைக் கொல்வான்! நீங்கள் அவன் நாட்டில் அத்து மீறினால் அவன் உங்கள் நாட்டில் அத்து மீறுவான்! இதில் எங்களை ஏன் இழுக்க வேண்டும்? நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும் ! ஒவ்வொரு முறையும் நாங்கள் ஏன் தீவிரவாதி இல்லை என விளக்க வேண்டும்!
- மறைந்த சகோதரர் செங்கிஸ்கான் அவர்களின் முகநூல் பதிவு. [3]
பொதுவான கேள்விகள்