ஷியாக்கள் யார்

Tamil • MyIslam24

ஷியாக்கள் யார் ?

ஷியாக்கள் யார் ?இஸ்லாத்தில் உள்ள பிரிவு தானே ?? என்ற கேள்வி முஸ்லிம்மல்லாதவர்களிடம் உள்ளது. ஆக, இந்த ஷியா சன்னி குறித்து, முஸ்லிம்களாகிய நாமும் முஸ்லிம்மல்லாத மக்களும் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.!!

சன்னி என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்று, அவர்களின் வழிமுறையை பின்பற்றுபவர்களை குறிப்பதாகும். இப்போது ஷியா'வை பற்றி மிக விரிவாக பார்ப்போம்.

ஷியா 'வை பற்றி பார்ப்பதற்கு முன்னர், இன்னும் சில விசயங்களை நினைவுபடுத்துவது முக்கியமானதாகும்.

இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)  கிறிஸ்தவத்தை போதிக்கவேயில்லை!!  இஸ்லாத்தையே போதித்தார்;(என்பது எங்களது நம்பிக்கை) முஸ்லிமாகவே ஏக இறைவனுக்கு கீழ்படிந்தும் மறுமையை நம்பியும் இறைதூதராக வாழ்ந்தார்; அதையே மக்களுக்கும் போதித்தார் என்பது நாம் அறிந்ததே!!!

ஆனால், இயேசு கிறிஸ்து  (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், பிரச்சாரம் செய்த பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள், (வழக்கம்போல இறைதூதர்களுக்கு செய்த இன்னல்களை) செய்தனர். பின்னர் பல சம்பவங்களுக்கு பிறகு, இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) வானளவில் உயர்த்தப்பட்டார்கள்;

ஆனால், அன்றிருந்த யூதர்களும், இன்றிருக்கும் யூதர்களும், இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களை கொன்றுவிட்டதாகவே நம்புகின்றனர். ஆனால் உண்மையில் வேறொருவர் ஒப்பாக்கப்பட்டார் என்பதே நிதர்சனம். என்னதான் யூதர்கள் தாங்கள் இறைதூதரை கொன்றதாக நினைத்து மகிழ்ச்சியில் மிதந்தாலும், அத்தோடு விடாமல், இயேசுகிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களின் போதனைகளையும் அவரின் கொள்கையையே மாற்றியமைத்தனர்.

ச(ப)வுல் என்பவர், இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களின் கொள்கையில் ஈர்க்கப்பட்டவன் என்பதை போல் காட்டிக்கொண்டு, தனது எழுத்துகள் மூலம் இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவரை கடவுளாக்கினார். மற்ற கலாச்சாரத்தில் பரவலாக காணப்பட்ட முக்கடவுள் கொள்கையை, இதிலும் புகுத்தினார். புதிய ஏற்பாட்டில் 70% இவர் எழுதியதே!! இதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்து, இவர் கொள்கையை ஏற்ற ஒரு பிரிவுக்கும், ஏற்காமல் ஏகத்துவத்தை நம்பிய பிரிவுக்கும் கலவரம் மூண்டு, பின்னர் அந்நாட்டின் அரசர், திருத்துவ கொள்கைக்கு ஆதரவாக சட்டத்தை வகுத்துக்கொண்டு அதை சரி என ஏற்றுக்கொண்டனர்.
(இது குறித்த கூடுதல் தகவலுக்கு:: https://m.facebook.com/story.php?story_fbid=682183898482237&id=100000719003276&ref=content_filter )

இன்றைக்கு வரை,கிறிஸ்தவர்களின் பல கோட்பாடுகள், நம்பிக்கைகள் பலவற்றும் பழைய ஏற்பாட்டில் இல்லாமல், புதிய ஏற்பாட்டில் மட்டுமே காணமுடிகிறது .. அதனால் தானோ என்னவோ, புதிய ஏற்பாடு மட்டுமே தனியாக பள்ளிக்கூடங்களில் கொடுக்கப்படுகிறது; இன்னும் இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களை எப்படியாவது கடவுள் ஆக்கிவிடவேண்டும் என மிக துடிப்புடன் எழுதப்பட்ட யோவான் சுவிசேஷத்தை மட்டும் தருகிறார்கள்....?!

என்ன தான் ப்ளான் பண்ணி பக்காவா பிராக்டிஸ் பண்ணி எழுதினாலும், இன்று வரை இந்த பைபிள் ஐ வைத்துக் கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தத்தளித்து வருகிறதை நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.

"" இறைவனே திட்டமிடுவதில் சிறிந்தவன்""

ஆக சவுல் என்பவரால் பலரும் (சற்றும் சிந்திக்காமல் ,ஆராயாமல்) வழிகேட்டில் உள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விசயமே!! ஆக, இயேசு கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் இருந்த காலத்திலும், அவர் போதித்த இஸ்லாத்தை, தடுத்த வண்ணமும்; குழப்பம் விளைவிக்கும் வண்ணமும் இருந்ததை அறிந்துக்கொண்டோம்..

இதே போல முஹம்மது நபி (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்), அவர் இஸ்லாத்தை போதித்த போதும், (மூதாதையர்களின் பழக்கம்) அன்று வாழ்ந்த யூதர்களையும் விடவில்லை.
முஹம்மது நபி (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களுக்கு பல தடவை மறைமுகமாக இன்னல்களையும் இடையூறுகளையும் தொடுத்தனர்.. கொல்லவும் முயற்சித்தனர்... அதுவும் நடக்கவில்லை.. அவர்களின் முயற்சி ஏதும் பயனளிக்காமலே போனது. முஹம்மது நபி (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களின் மரணத்திற்கு பின், ஆட்சிக்கு வந்த ஆபுபக்கர் (அல்லாஹ் இவரை பொருந்திக்கொள்வானாக) அவர் பிரதிநிதியாக ஆக்கப்பட்டார்; அவர் ஆட்சியில் முஸைலமா போன்ற நபர்களோடு போரிலேயே அவரின் ஒன்றரை ஆண்டு முடிந்தது; அதற்கு பின் உமர் (அல்லாஹ் இவரை பொருந்திக்கொள்வானாக), அவர் பிரதிநிதியாக ஆக்கப்பட்டார்; இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள், பிரதிநிதியாக இருந்தார். மிக நல்லாட்சி அமைந்தது; இஸ்லாத்தினை  அழிக்க நினைத்த எவராலும் சோபிக்க முடியவில்லை. யூதர்களும் ஏதேனும் வாய்ப்புக்காக காத்துக்கிடந்தனர்...

உமர் (ரழி) அவர்களுக்கு பின் உஸ்மான் (ரழி) அவர்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. அவர்களின் ஆட்சியில்,  மிக முக்கியமான யூத சதி அரங்கேற தொடங்கியது ..

ஈரான் என்ற பாரசீகப் பேரரசின் சாம்ராஜ்யம் தாக்கப்பட்டதும், தகர்க்கப்பட்டதும் அன்றைய இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது ஆட்சித் தலைவராக இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வீரமிக்க கைகளால் தான். இதனால் பாரசீக சக்திகள், பாசி படிந்த உயர் சாதியினர் உமர் (ரலி) அவர்களைப் பழி வாங்கத் துடித்தனர்.

பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த பாரசீகர்கள் பதவிப் பித்தை விட்டு வெளியேறுவது சாதாரண விஷயமல்ல! அதனால் அவர்கள் பழி வாங்கத் துடிப்பது இயல்புதான். எனவே இவர்களுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒத்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் கை கோர்த்தனர். உமர் (ரலி) அவர்களுக்கு எதிராக இவ்விரு தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து களம் அமைத்தனர்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இந்த சிந்தனை உருவாகி முஸ்லிம்களுக்குள் பிளவு விளையக் காரணமானவன் யமன் பிரதேசத்திலிருந்து வந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா எனும் ஒரு யூதன். இவன் இஸ்லாத்தைத் தழுவி தன்னை ஒரு முஸ்லிமாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றான். முஹம்மது நபி (ஸஸ்) அவர்களின் பெயரில் பல தகவல்களை (ஹதீஸ்களை)  இட்டுகட்டினார், இவனும் இவனது சகாக்களும்.

அப்துல்லாஹ் இப்னு ஸபா, ஒரு யூதன்! இவனுடைய மூதாதையர்களான பனூ குரைளா, பனூ நுளைர்,பனூ கயன்காஃ ஆகிய கோத்திரத்தார் இஸ்லாத்தை, அதன் இறைத் தூதரை எதிர்த்துப் படை நடத்தினர். இவர்கள் நடத்திய போர்கள் அனைத்திலும் அடுக்கடுக்காகத் தோல்வியைத் தான் சந்தித்தனர். இதனால் முஸ்லிம்களை அவர்கள் நேருக்கு நேர் களத்தில் சந்திக்கும் காரியத்தைக் கைவிட்டனர். ஆனால் திரை மறைவில், முதுகுக்குப் பின்னால் நின்று குரல் வளையை அறுக்கும் கலையைக் கையில் எடுத்தனர். இதன்படி யமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸபாவும் அவனது சதிகார சகாக்களும் ஒரு திட்டம் தீட்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்தவரும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களில் மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் தலைநகர் மதீனாவிற்குள் அந்தத் திட்டத்தை அரங்கேற்றினர்.

தங்கள் காரியத்தை அரங்கேற்றுவதற்கு அலீ (ரலி) அவர்களைக் கவசமாக்கிக் கொண்டு மதீனாவில் குளறுபடிகளையும், குழப்பத்தையும் தோற்றுவித்தனர். மக்களின் மனங்களில் விஷக் கருத்துக்களைத் தூவினார்கள்.

அலீ (ரலி) அவர்களுக்குப் புனிதமேற்றும் பூர்வாங்கப் பணியில் இறங்கினர். அலீ (ரலி) அவர்களுக்கு விலாயத் இருப்பதாக வாதிட்டனர். அலீ (ரலி) அவர்களின் கவனத்திற்கு வராமலேயே இந்தச் சதி வலையைப் பின்னினர். எந்தளவிற்கு என்றால், அலி (ரலி) அவர்கள் தெய்வீக தன்மை கொண்டவர்கள், அவர்கள் இறக்கவில்லை, அல்லாஹ் அலி அவதாரத்தில் வந்துள்ளான் என்ற அளவுக்கே பரப்பி வந்தான்; இத்தகைய சித்தாந்தங்களை வைத்தே உருவாக்கப்பட்டது ஷியா மதம்.

இது ஒரு பக்கமிருக்க அவதூறு பிரச்சாரங்களையும் கையிலெடுத்தனர். முஹம்மது நபி (ஸல்) சொல்லாத எண்ணிலடங்கா அறிவுப்புகளை, நபி அவர்கள் சொன்னதாக மக்களிடத்தில் அறிவித்தனர். இன்னும் இதற்கு ஒரு படி மேல் சென்று, நபி அவர்களை பற்றி தவறான பிம்பம் ஏற்படுத்தும் செயலிலும் ஈடுப்பட்டனர். இது குறித்து மிக விரிவாக படிக்க ..

http://mujahidsrilanki.com/what-is-happening-in-iran/
http://www.onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/#.VyC4fzNZ4xY


ஷீயா என்றால் யாா்,  அவர்களின் வரலாறு அனைத்தும் மிக தெளிவாக விரிவாக விவரிக்கும் புத்தகம் pdf ல்,  தவறாமல் டவுண்லோட் செய்யவும்.. http://www.islamkalvi.com/?p=5388

ஆக, ஷியா என்பது இஸ்லாத்தின் ஒரு பிரிவல்ல!! தனி மதமாகும் ..
பிரித்தாளும் சூழ்ச்சிக்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கும், சில ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்ட அஹமதியாக்கள்  எப்படியோ, அது போலவே அன்றைய சூழ்ச்சியில் உருவாக்கப்பட்ட மதம் தானே தவிர வேறேதும் இல்லை!!!