நபிகள் நாயகம் மேல் ஜாதிக்காரரா?
நபிகள் நாயகம் அவர்கள் குரைஷி குலத்தவர் என்றால், இஸ்லாம் உயர்ந்த ஜாதி இருக்கிறதா?
இஸ்லாத்துடைய அடிப்படை நம்பிக்கை, இறைவன் ஒருவன் தான், அவன் தான் மனிதனின் ஆதி மூதாதையரான முதல் ஜோடியை படைத்தான்; அவர்கள் மூலம் பல்வேறு மக்கள் பல்கி பெருகினார்கள்; இன்னும் மனிதர்களை படைத்துவிட்டு அவர்களை திக்கற்றவர்களாய் விட்டுவிடாமல் நன்மை தீமை பிரித்து அறிவிக்க கூடிய சில சட்டத்திட்டத்தை கொண்ட முழு வாழ்க்கை முறையை, குறிப்பிட்ட சமூகத்தின் ஒருவரை தேர்ந்தேடுத்து அவர் மூலம் அவர்களுடைய சமூகத்திற்கு தந்தருளினார்;
இவ்வாறு ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைதூதர்கள்/தீர்க்கத்தரிசிகள் மக்களுக்கு அவர்கள் வாழ்ந்துக்காட்டி போதிக்கவும் செய்தனர்.. நன்மை ஏவி தீமை தடுக்கும் பணியிலேயே இருந்தனர்..
இறைதூதர்கள் வரிசையில் வருபவர்கள் தான் ஆப்ரஹாம் (இப்ராஹிம்) ,நோவா (நூஹ்) ,மோஸஸ் (மோஸே), ஜீஸஸ் (ஈசா) போன்ற எக்கச்சக்க இறைத்தூதர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தவருக்கு அனுப்பப்பட்டவர்கள்; இதில் கடைசி இறைதூதராக ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அனுப்பப்பட்டவர் தான் முஹம்மது நபி(ஸல்) என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.
ஆக நபிகள் நபிகள் பிறந்ததற்கும் முன்பும், நபிகள் நாயகம் பிறந்த பின்பும் அரேபியாவில் குலங்கள் இருந்தன; பின்பு 40வருடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைதூதராக தேர்ந்தேடுக்கப்பட்டார்; அதற்கு பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மற்ற இறைதூதர்களின பணிகளான நன்மையை தீமையை தடுக்கும் ெ
செயல்களில் ஈடுபட்டார். அப்பொழுது தான் தீண்டாமை, சாதி கொடுமைகள் எனும் மிகப்பெரும் தீமையை எதிர்க்கலானார்;;
முன்பு அரேபியாவில் பல்வேறு குலம் இருந்தது, அதனுள் சிலரை இழிவாக கருதும் வழக்கமும் இருந்தது; உதாரணத்திற்கு ஹபஷி குலம் என இருந்தது (அதாவது நீக்ரோஸ்/Negroes) ; அவர்கள் இழிவாகவும் அடிமையாகவும் கருதப்பட்டனர்;
ஆனால் நபிகள் நாயகம் கூறியதாவது, எந்த ஒரு கருப்பனும் வெள்ளையனை விட சிறந்தவனுமல்ல; எந்தவொரு வெள்ளயனும் கருப்பனை விட சிறந்தவனல்ல!! எந்த ஓர் அரபியும் அரபியல்லாதவனை விட சிறந்தவனுமல்ல; எந்த ஒரு அரபி அல்லாதவனும், எந்த ஒரு அரபியைவிட சிறந்தவனுமல்ல!! என்றார் ..
இன்னும், இப்படி சொன்னது மட்டுமல்லாமல், செய்தும் காட்டினார்; சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பல்வேறு வழிமுறைகளில் நடைமுறைபடுத்தினார்.. இன்னும் முதன்முதலில் மக்காவில் "பாங்கு" (தொழுகைக்கு அழைப்பு விடும் பணியை) பிலால் எனப்படும் (ஹபஷி இனத்தவரிடம்) கொடுத்தார்..
ஆக தற்போது எவ்வாறு, இஸ்லாத்தை ஏற்றவுடன் ஜாதி பெருமைகளெல்லாம் மறைந்துவிடுமோ அது போல தான் அன்றும் இஸ்லாத்தை ஏற்றவுடன் குலம்/நிறம்/மொழி அனைத்துவிதமான பாகுபாடுகள் மறைந்தது; இன்று அரேபியாவில் எந்த குலமும் இல்லாமல் இருப்பதே அன்றைய புரட்சி தான் காரணம்.
ஒரு உயர்குலத்தில் (என கருதப்பட்ட குரைஷி குலத்தில்) ஒரு இறைதூதரை இறைவன் தேர்ந்தெடுத்தது, ஓர் உயர் ஜாதியினரை (என கருதபடுபவரை) வைத்து தீண்டாமையை ஒழிப்பது இவ்வுலகத்திற்கு மிகப்பெரும் முன்னுதாரணமாக காட்டுவதற்கு கூட இருக்கலாம். இறைவனே மிக்க அறிந்தவன்.
ஆக இஸ்லாத்தில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று எதுவுமில்லை;
(உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு ஜாதி தீண்டாமை எதிர்ப்பாளரை எடுத்துக் கொள்வோம்; ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு தான் அவரும் பிறந்திருப்பார், அதனால் அவர் அதை ஆதரிக்கிறார்; அது அவரது கொள்கைகளில் ஒன்று; என்றா எடுத்துக் கொள்வோம்?? பிறகு அவருடைய கருத்தை பார்த்து தானே அதை(ஜாதி/தீண்டாமை) பற்றியை அவரது நிலையை அறிந்து கொளளமுடியும்.)