அல்லாஹ் - கேள்விகளும் பதில்களும்

Tamil • MyIslam24

முகநூல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலையதளங்களில் இஸ்லாத்தை குறித்து (அவர்களின் சொற்ப அறிவுடன்) ஏகப்பட்ட அவதூறுகளையும் குற்றச்சாட்டையும் பகிர்ந்து வருகின்றனர். அவைகளில் ஒன்று, கீழுள்ள பதிவாகும். அதன் கீழே அதற்கான மறுப்பையும் பகுதி பகுதியாக கொடுத்துள்ளோம்.

கேள்வி: அல்லா என்பவன் யார்!அல்லா என்ற இறை முயற்சி முரண்பாடுகளின் சங்கமம்! ஏன் மறுக்க போகிறீர்கள்!?
1.உருவம் இல்லாதவன் எனவே நிழலும் இல்லாதவன்
2.குரல் இல்லாதவன் ஆனால் பக்கம் பக்கமாக வசனங்களை இறக்கியவன்.
.3.குணம் இல்லாதவன் ஆனால் தன்னை வணங்க மறுப்போரை வெறுப்பவன்
4.உணர்ச்சி இல்லாதவன் ஆனால் பெண்களை போகப் பொருளாக்கியவன்.
5.காலம் கடந்தவன் ஆனால் 1400 ஆண்டுகளாக மட்டுமே அறியப்படுபவன்.
6.எங்கும் நிறைந்தவன் ஆனால் மெக்காவில் மட்டுமே சென்று வணங்கத்தக்கவன்.
7.எல்லாம் தெரிந்தவன் ஆனால் உருது மொழியில் வணங்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்பவன்
8.அமைதியை விரும்புபவன் ஆனால் போர் புரிந்தாவது தன்னிருப்பை நிலை நாட்டச் சொன்னவன்!
9.ஞாலம் கடந்தவன் ஆனால் அவன் இருப்பை கண்டறிந்து(!) சொன்னவர் நபி மட்டுமே!
10.மாற்றமே உலக தத்துவமாக ஆக்கியவன் ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை செய்தவன்

நமது மறுப்பு:

/////////// அல்லா என்பவன் யார்!அல்லா என்ற இறை முயற்சி முரண்பாடுகளின் சங்கமம்! ஏன் மறுக்க போகிறீர்கள்!? 1.உருவம் இல்லாதவன் எனவே நிழலும் இல்லாதவன் 2.குரல் இல்லாதவன் ஆனால் பக்கம் பக்கமாக வசனங்களை இறக்கியவன்.//////////

அல்லாஹ் என்றால் வேறு ஒரு அரபு நாட்டு கடவுள் என்ற தவறான சிந்தனையினால் தான் இந்த அறியாமையின் வாதங்கள். உருவம்(/வாய்) இருந்தாலும் இல்லையென்றாலும் அது எந்த விதத்திலும் கடவுள் தன்மை பாதிக்கபோகிறதா?? ஒரு வேளை உருவம் இல்லை என நினைக்கும் நீங்கள்,  உங்களுடைய வேதத்திலும் கடவுளுக்கு உருவமில்லை என இருப்பதை மறந்துவிட்டீர்களா?? அது போக நமக்கு பேச  நாக்கு தேவை அதற்கேற்ப நாக்கின் அசைவு இவை எல்லாம் முக்கியம்,  இது இல்லாமல் செடி கொடிகள் உரையாடி கொள்கின்றன, அழுகின்றன சிரிக்கின்றன, இதுவெல்லாம் படைத்த இறைவன் அவன், தான் நாடியவற்றை நாடியவாறு செய்வான்.. மனிதனை போல் தான் இறைவன் என நினைப்பது தான் இறைவனை பற்றியான தவறான புரிதலின் முதற்கட்டம்.

//////// 3.குணம் இல்லாதவன் ஆனால் தன்னை வணங்க மறுப்போரை வெறுப்பவன் ////////////////

குணம் /பண்புகள் இல்லை என நாங்கள் யாரும் கூறவில்லை. திருக்குர்ஆனில் 99 பண்பு/குணங்களும் உள்ளன.. தன்னை வணங்க மறுப்போரை கூட பல வருடங்கள் வாழ வைத்து, 24 மணி நேரமும் இடைவிடாத ஆக்ஸிஜனும் வழங்கி இன்னும் எண்ணற்ற அருள்களை புரிந்துக் கொண்டு இருக்கிறான், அவரை மறுத்து வாழ்வது மிகப்பெரும் குற்றமும் நன்றிக்கேடு தானே?! இருந்தாலும் பல காலம் வரை அவனுக்கு அவகாசமும் கொடுக்கிறான்.

//////////////4.உணர்ச்சி இல்லாதவன் ஆனால் பெண்களை போகப் பொருளாக்கியவன். /////////////

பெண்களை போகப் பொருளாக ஆக்கபடும் இச் சுழலிலும் முந்தைய சுழலிலும் ஹிஜாப் எனும் பாதுகாப்பு கேடயத்தை வழங்கியது இஸ்லாம்;  ஆனால் நாகரீகம் என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக்கியது யார்?!

////////////////////5.காலம் கடந்தவன் ஆனால் 1400 ஆண்டுகளாக மட்டுமே அறியப்படுபவன். ////////////////////////////

அல்லாஹ்வை அறிமுகப்படுத்தியது  முஹம்மது நபி தான் என சில அறிவீனா்கள் விவாதங்களில் உளருகின்றனா்,  முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பு, அப்துல்லாஹ் என பெயா் கொண்டவா்கள் இருந்தனா்.. அதுமட்டுமல்லாமல், அப்துல்லாஹ் இப்னு அபூபக்கா் என்ற கிறித்தவ தலைவா் கி.பி 523 ல் இருந்தாா் (ஆதாரம்: Rick Brown, Who was ‘Allah’ before Islam? (2007), page 8.)

இஃது ஐந்தாம் நூற்றாண்டு  தானே, இன்னும் பின்னோக்கிச் செல்வோம்.

முதல் நூற்றாண்டில்,  சிாியா பலஸ்தீன் பகுதியில், நபதியீன்ஸ் ( Nabataeans)  என்ற சமூகம் வாழ்ந்தது, அவா்களும் படைப்பாளனை குறிப்பதற்கு  அல்லாஹ் என்றே அழைத்தனா், இவா்கள், மக்கத்து முஷ்ாிக்குகள் போல்,  பல்வேறு சிலைகளை,  அல்லாஹ்விடம் இவை பாிந்துரை செய்பவை என எண்ணினாா்கள். ( ஆதாரம்: Dan Gibson, The Nabataeans: Builders of Petra (2003), Page: 209 ,,,, Thorkild Jacobsen, The Harps that Once: Sumerian Poetry in Translation (1997), Yale University Press, Part. 1, Pages: 53-61,,,,Kees Versteegh, The Arabic Language (1997), Columbia University Press-New York, Page: 30) 

இன்னும் பின்னோக்கி செல்வோம். கி.மு 1700 ல் அட்ரோஹசிஸ் காப்பியங்களின்  (epic of Atrahasis)மூலமும் பாபிலோன் மக்கள் அல்லாஹ்வை மாபெரும் சக்தி,  ஒரே படைப்பாளன் அந்தஸ்தில் வைத்தது அறிய முடிகிறது ( ஆதாரம்:  Stephanie Dalley (1989), Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others , Oxford University Press, Pages: 3-10)

ஆகையால் அல்லாஹ் என்பது முஹம்மது நபி ஸல் அவா்கள் உருவாக்கவில்லை என்பதும்,  பல்வேறு நூற்றாண்டுகளாகவும் அல்லாஹ்வை ஒரே  படைப்பாளனாக / supreme deity  ஆக கருதினா் என தெளிவாகியுள்ளது.. இன்னும் இயேசு (அலை) அவா்களுடைய தாய் மொழியான அராமைக் மொழியில், அல்லாஹ் / அலாஹா என்றே அழைத்தாா். இணையத்தில் அவற்றை எளிதாக,இன்னும் கூடுதலான தகவலை பெற்றுக் கொள்ளலாம், இருப்பினும் சுருக்கமாக தொிந்துக்கொள்ள, இந்த வீடியோவை பாா்க்கவும். http://m.youtube.com/watch?v=BTSG0YzlGB8&fulldescription=1&guid=&hl =en&client=mv-google&gl=IN இன்னும் இக்கேள்வி எழ காரணம் அல்லாஹ் என்றால அரபுக்கடவுள், முஸ்லிம்களின் கடவுள் என நினைத்ததனால் தான்; படைப்பாளனை அரபியில் குறிக்கும் சொல்லே அல்லாஹ்; 

/////// 6.எங்கும் நிறைந்தவன் ஆனால் மெக்காவில் மட்டுமே சென்று வணங்கத்தக்கவன். /////////

மக்காவில் மட்டும் தான் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என, இஸ்லாம் சொல்லவேயில்லை!! பின்பு எதற்கு பள்ளிவாசல்?? இஸ்லாம் குறித்த சொற்பமான அறிவை உடையவர் கூட இதை அறிவார்கள்; இதிலிருந்தே இந்த பதிவை எழுதியவருக்கு இஸ்லாம் குறித்த அடிப்படை செய்திக் கூட தெரியவில்லை என தெரிகிறது 

///////////////////////////7.எல்லாம் தெரிந்தவன் ஆனால் உருது மொழியில் வணங்கினால் மட்டுமே ஏற்றுக் கொள்பவன்!/////////////////////////////

அது உருது இல்லை அரபி.. அரபியில் வணக்க வழிபாடுகள் நடத்துவது ஏன் என்பதை அறிய suvanappiriyan.blogspot.in/2006/06/blog-post_28.html?m=1

///////////////////////// 8.அமைதியை விரும்புபவன் ஆனால் போர் புரிந்தாவது தன்னிருப்பை நிலை நாட்டச் சொன்னவன்! /////////////////////// இந்த வாதத்திற்கு ஆதாரமாக ஏகேனும் மேற்கோள் சுட்டிக்காட்ட இயலுமா? படைப்பாளனின் இருப்பை நிலைநாட்ட எதுவும் தேவையில்லை..

/////////// 9.ஞானம் கடந்தவன் ஆனால் அவன் இருப்பை கண்டறிந்து(!) சொன்னவர் நபி மட்டுமே! ////////

ஆம் ஞானமிக்கவன் தான் , அல்லாஹ் என்பது அரபு நாட்டு கடவுள் அவரை உருவாக்கியது முஹம்மது நபி தான் என்ற அறியாமையினால் தான் இத்தகைய கேள்வி, அல்லாஹ் என்றால் என்ன என்பதை ஐந்தாவது கேள்விக்கான பதிலில் பதியப்பட்ட லிங்கை பார்த்து தெரிந்துக் கொள்ளவும். நம்மை படைத்தவனின் இருப்பை கண்டறிய அவன் படைத்தவற்றை பகுத்து அறிந்தாலே போதும்!!

//////10.மாற்றமே உலக தத்துவமாக ஆக்கியவன் ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை செய்தவன்///////

ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினால் எதை பற்றி கேட்கிறீர்கள் என்பதை புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும். வெறுமனே நீங்கள் எங்கோ கேள்விப்பட்டவற்றை தான் கேள்வியாக பதிந்துள்ளீர்கள்... எங்களுடைய அன்பான வேண்டுகோள்: - இஸ்லாத்தை சரியாக கற்காமல், இஸ்லாத்தை விமர்சிக்காதீர்கள்.