இந்த செயலி'யை பற்றி

Tamil • MyIslam24

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

இணையத்தளங்களிலும், சமூக வலயதளங்கள் மற்றும் நேரிலும் பல முஸ்லிம்மல்லாத அன்பர்களால் இஸ்லாம் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கும், வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், இன்னபிற குற்றச்சாட்டுகளுக்கும், தவறான புரிதல்களுக்கும் அழகிய முறையில் பதில்களையும் / விளக்கங்களையும் / மறுப்புகளையும் அளித்திடுவதர்கே இந்த முயற்சி. யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக அறவேயில்லை.

முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளே மேலதிக தகவல்களுக்கும், இன்னும் அதிகம் அறிந்துக்கொள்வதற்கும், திருக்குர்ஆன் மற்றும் இன்னபிற (குறிப்பிட்ட தலைப்பிலான) இஸ்லாமிய புத்தகங்களை படிக்க விரும்பினால், தாராளமாக எங்களுக்கு (Feedback மூலம்) மின்னஞ்சல் வாயிலாக கேட்கலாம். அதனை எங்களது அன்பளிப்பாக உங்களுக்கு அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு ஏன் செய்கிறோம் .. ?! இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களோ ஏராளம் ஏராளம்; இந்த தவறான புரிதல்களை களைவதற்கு ஆரோக்கியமான உரையாடல்களாலே முடியும். ஒன்று எங்களோடு உரையாடுங்கள் அல்லது புத்தகங்களோடு உரையாடுங்கள்...

எங்களோடு உரையாடும் வகையில் தான், பரவலாக மக்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளுக்கும், நம் மத்தியில் பிரிவினையையும், பகைமையையும், மனக்கசப்புகள் ஏற்படுத்திட இஸ்லாம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதில்களை நமது செயலி'யில் அளித்துள்ளோம்.

எல்லா நகரங்களிலும் இஸ்லாமிய புத்தகங்கள் கிடைக்கும் கடைகளோ மிக குறைவு. பல முஸ்லிம்களுக்கு கூட அக்கடைகள் தெரியாது என்பதே மிக வருத்தமளிக்கக்கூடிய விசயம்; எத்தனையோ சகோதரா்கள், பெரியவர்கள், "பாய் ரொம்ப வருஷமா குர்ஆன் படிக்க நாடி, பல கடைகளில் தேடியும் கிடைக்கல, தெரிஞ்ச பாய்'ட்ட கேட்டும் அவர் தரல" என்று பலர் ஆதங்கத்துடன் சொல்வதை அதிகம் கேட்க நேரிட்டது. ஆக, முஸ்லிம்மல்லாத (பிற மத) மக்களுக்கு எளிதாக கிடைக்க உதவிசெய்யும் வண்ணம், புத்தகங்களை அனுப்பலாம் என நினைத்துள்ளோம்.

தேவைபடுவோர் மின்னஞ்சல் (feedback) மூலம் தொடர்புக் கொள்ளுங்கள்..

ஒவ்வொரு கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்ட எண் அடைப்புக்குறிக்குள் போடப்பட்டிருக்கும். அந்த எண்கள் கீழ்க்கண்டவற்றை குறிப்பதே!

எங்களுக்கு உதவிய இணையதளங்கள் / ஆக்கங்கள் :

1. அபு இஸாரா அவர்கள் மொழிபெயர்த்த பதிவுகள்.

http://www.ottrumai.net/IslamicQA/index.htm
http://egathuvam.blogspot.in/2008/02/blog-post_02.html
http://rafeeqsarticles.blogspot.in/2014/10/pdf-3-parts.html

2. சகோதரர் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய புத்தகங்கள்;

http://www.onlinepj.com/books/kutrachattuhalum_padhilkaLum/#.V3U14vl97IU
http://www.onlinepj.com/books/iyesu_irai_makana/#.V3U18_l97IU
http://www.onlinepj.com/books/arthamulla_kelvikal/#.V3U22_l97IU
http://www.onlinepj.com/books/manapadam_seyvom/#.V3U3MPl97IU

3. (சில மாதங்களுக்கு முன்பு) மறைந்த அன்புச் சகோதரர் செங்கிஸ்கான் அவர்களது பதில்கள்;

4. http://quranmalar.blogspot.in/

5. http://www.ethirkkural.com/

6. http://iraiadimai.blogspot.in/

7. http://answeringchristian.blogspot.in/

8. http://www.satyamargam.com/islam/others.html

9. http://christianpaarvai.blogspot.in/

10. http://suvanappiriyan.blogspot.in/


ஆரம்பக்கட்ட முயற்சியாக சில கட்டுரைகளையே பதிந்திருக்கிறோம்; சில குற்றச்சாட்டுகளுக்கே மறுப்புக்களை தந்துள்ளோம். அடுத்த அப்டேட்டில் இன்னுமதிகமாக இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) தருவோம். நீங்களும் சில கேள்வி-பதில் கட்டுரைகளையோ, விளக்கங்களையோ தர விரும்பினால், எங்கள் செயலி’யின் முகப்பு பகுதியில் உள்ள “Feedback” வழியாக எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அடுத்த அப்டேட்டில் செயலி’யில் இணைக்கப்படும். தகவல்கள் யாரையும், எந்த மதத்தையும் இழிவுபடுத்துவது/புண்படுத்துவது போல் இருக்கக்கூடாது என்பது மிக முக்கிய நிபந்தனை.

இந்த செயலி’யில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், தாராளமாக சுட்டிக் காட்டலாம். தவறுகளை திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம்.

இந்த அப்ளிகேஷன், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்மல்லாத அன்பர்களுக்கும், புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் பயன்படும் என நம்புகிறோம். :)