ஹஜ் பற்றிய கேள்விகளும் பதில்களும்
கேள்வி: அய்யப்பன் கோயிலுக்கு போனா மூடநம்பிக்கை. மக்காவுக்கு போனா புண்ணியம்.
திருப்பதியில் மொட்டை போட்டா மூடநம்பிக்கை. மக்காவில் போட்டால் புண்ணியம்.
ஒரு சிலையில் கடவுள் இருப்பதாக நினைத்து வழிபட்டால் மூடநம்பிக்கை. சாத்தான்ன் இருப்பதாக நினைத்து ஒரு தூணில் எறிந்தால் புண்ணியம்.
கோயிலை சுத்தினால் மூடநம்பிக்கை காபாவை சுத்தினால் புண்ணியம்.
இன்னொருவரை வரவேர்க்க வணக்கம் சொல்வது கூட குற்றம்,
மக்காவிலிருக்கும் கல்லை முத்தினால் புண்ணியம்.
ஹிந்து கோயிலுக்கு போக சொக்கவை களட்டசொன்னா மூடநம்பிக்கை காபாவில் செய்தால் புண்ணியம்.
காளிக்கு உயிர் பலி மூடநம்பிக்கை, மக்காவில் புண்ணியம்.
மந்தை ஒருமுகப்படுத்த ஒரு சிலை வைத்தல் மூட நம்பிக்கை மனதை ஒருமுகப்படுத்த கிப்லாவை நோக்கி நின்னா பகுத்தறிவு.
பல கேள்வி கேட்கப்பட்டதினால் பகுதியாக பகுதியாக பிரித்து பதிலளிப்போம்.
/////// அய்யப்பன் கோயிலுக்கு போனா மூடநம்பிக்கை. மக்காவுக்கு போனா புண்ணியம்.//////
முதலாவதாக நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் ! எதையும் காரணகாரியங்களோடு நம்புவது நம்பிக்கை ! கண்மூடித் தனமாக நம்புவது மூடநம்பிக்கை !
கடவுளால் அனைத்தும் முடியும் என்றால் நம்பிக்கை ! கடவுளால் செய்ய முடிவதை ஒரு கல்லோ, கயிறோ , மரமோ மட்டையோ, மனிதனோ மிருகமோ செய்யும் என நம்பினால் அது மூடநம்பிக்கை !
கடவுளின் கட்டளைக்கு கட்டுப்பட்டால் அது நம்பிக்கை, முன்னோர்களுக்கும், மனோ இச்சைக்கும் கட்டுப்பட்டால் அது மூட நம்பிக்கை !
இஸ்லாத்தின் அனைத்து செயல்பாடுகளும் கடவுளின் வழிகாட்டுதல்! அதுதான் இஸ்லாத்துக்கும் மற்ற கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு !
மற்ற மதங்களிளிலும் கடவுள் நம்பிக்கை உண்டு ! மனிதன், மிருகம்,பூமி சூரியன்,சந்திரன் காற்று, நீர், நெருப்பு,ஆகாயம் சிலை, எல்லாமே கடவுள் என்பது தான் அந்த நம்பிக்கை !
இஸ்லாத்தின் கடவுள் நம்பிக்கை எல்லாமே கடவுள் என்பதல்ல ! படைத்தவன் ஒருவனே கடவுள் மற்றவை எல்லாம் படைப்பினங்கள் என்பதுதான் ! படைத்வனை மட்டுமே வணங்கவேண்டும் ! படைப்பினங்க்களை வணங்க கூடாது என்பதுதான் !
இதில் எது அறிவுப்பூர்வமானது? எது மனிதனை கடவுளின் பெயரால் ஏமாற்ற முடியாதது ? அது போலத்தான் மற்ற மதங்களிலும்தங்கள் புனிதப் பயணம் செல்கிறார்கள் ! முஸ்லிம்களும் புனிதப் பயணம் செல்கிறார்கள் ! எதில் அனைவரும் ஒரு தாய்மக்கள் எனும் மனிதகுல சமத்துவம் இருக்கிறது? பிறப்பின் அடிப்படையில் பேதம் இல்லாத தன்மையை சட்டம் போட்டும் திட்டம் போட்டும் உலக நாடுகளில் ஒழிக்க முடியவில்லை ! ஆனால் அதை மக்காவில் செயலில் நிறைவேற்றிக் காட்டுவது மூடநம்பிக்கையா? ?
////////// திருப்பதியில் மொட்டை போட்டா மூடநம்பிக்கை. மக்காவில் போட்டால் புண்ணியம். ஹிந்து கோயிலுக்கு போக சொக்கவை களட்டசொன்னா மூடநம்பிக்கை காபாவில் செய்தால் புண்ணியம். ////////
இந்த செயல்கள் ஒன்றாக இருக்கலாம் ஆனால் நோக்கம் காரணி வேறு..
இறைவனுக்கு காணிக்கை தருகிறேன் என எண்ணி/ சொல்லி தான் திருப்பதியிலோ வேறு கோயிலிலோ மொட்டை அடிக்கபடுகிறது... இறைவனுக்கு அந்த முடி தேவையா என்ன?
ஆனால் இஸ்லாத்தில் இவ்வாறான சிந்தனையோடு அல்ல! ! முதலில் ஹஜ்ஜின் போது மொட்டை அடித்தே ஆக வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை, முடியை வைத்து அங்கு அலப்பறை செய்யாமல் அங்கு வருகையில் முடியை ஒட்ட வெட்டியவர்களாகவோ அல்லது மொட்டை அடித்தோ, இன்னும் சாதாரண ஆடை, அதும் தைக்கப்படாத இரண்டு வெள்ளை துணிகள் தான் அணிந்து வர வேண்டும். அனைவரும் மிக எளிமையான முறையில் அங்கு வருகிறார்கள், இங்கு நன்றாக கவனிக்க வேண்டிய விசயம், ஹஜ் செல்பவர்கள் சற்று செல்வம் உள்ளவர்களே!! இன்னும் பெரிய கோடிஸ்வரா்களே!! ஆக இவர்கள் இது போன்று செய்வதன் மூலம், இவர்களுக்கு பெருமையோ நான் தான் பெரியவன் என்ற அகம்பாவமோ புதைக்கப்படுகிறது. நான் பெரியவன் அல்ல!! இறைவன் தான் மிக பெரியவன் என்ற சிந்தனைக்கு வித்திடும்.
வெள்ளைத் தோல் காரணமாகத்
தன்மை உயர்ந்தவரென எண்ணும்
ஐரோப்பியரின் தலையில்
கருப்புநிற ஆப்ரிக்கரின் கால்கள்
படுகின்ற அற்புதத்தை அங்கேதான்
காண முடியும். இந்தியன்
இந்தியனல்லாதவன் என்ற
வேறுபாடு அங்கேகிடையாது.
தமிழன், வேற்று மொழி பேசுபவன்
என்ற பேதமும் அங்கேகிடையாது.
பூர்வீக முஸ்லிம், புதிதாக
இஸ்லாத்தை ஏற்றவன்என்ற
பாகுபடும் அங்கேகிடையாது.
மனிதனைப் பேதப்படுத்துகின்ற தேசம், மொழி, நிறம் போன்ற எல்லா வேறுபாடுகளும் மறக்கப்படும் ஒரே இடமாக அது திகழ்கின்றது.
எல்லா விதமான வேற்றுமைகளையும் வேரறுத்து உலக சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மாநாடு என்றும் ஹஜ்ஜைக் குறிப்பிடலாம்.
ஹஜ் கடமையை நிறைவேற்றி முடிக்கும் வரை அனைவரும் ஒரேவிதமான ஆடை அணிந்து இருக்கும் காட்சியையும் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் காட்சியையும் அங்கே காணலாம்.
//////////////ஒரு சிலையில் கடவுள் இருப்பதாக நினைத்து வழிபட்டால் மூடநம்பிக்கை. சாத்தான்ன் இருப்பதாக நினைத்து ஒரு தூணில் எறிந்தால் புண்ணியம். கோயிலை சுத்தினால் மூடநம்பிக்கை காபாவை சுத்தினால் புண்ணியம்.////////////////
ஒரு சிலையில் கடவுள் இருப்பதாக நினைத்து வழிபட்டால் மூடநம்பிக்கை மட்டுமல்லாது மிகப்பெரும் பொய், நன்றிக்கெடு.
ஒரு பூனையை பார்த்து இது தான் யானை என்று சொன்னால் எப்படி அது பொய்யோ? அது போல தான் இதுவும் .. இல்லை இல்லை!! இப்பூனையை நான் யானை என நினைத்து கொள்கிறேன் என சொன்னால் இது ஏற்புடையத வாதமா?? நினைத்துக் கொள்கிறேன் என சொல்லி எதை வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் நினைத்து கொல்ளலாம்... நாயை சிங்கம் என்றும் புலியை எலியென்றும்... ஆக இது தானே மூடத்தனமான நம்பிக்கை!!
சாத்தான் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டு கல் எரியவில்லை; மாறாக இப்ராஹிம் நபி இவ்வாறு செய்தார் என்பதனால் தான் செய்கிறோம். மேலும் கல்லெறிவது, கறுப்புக் கல்லை முத்தமிடுவது சுற்றுவது என அனைத்துமே இவை எல்லாமே இப்ராஹீம் எனும் தூதரின் தியாக வரலாறை நினைவு கூறவேண்டும் என்பதற்காகத்தான்!
பொதுவாக வரலாற்றை வாசித்து மனதில் பதிய வைப்பதை விட அவற்றை செயல்களாக செய்து படிக்கும்போது அவை மனதில் ஆழமாகப் பதியும்! அதனால் தான் குழந்தைகளுக்கு அசைவுகளுடன் கற்றுக் கொடுக்கும் முறை கடை பிடிக்கப்படுகிறது ! அந்த அடிப்படையில் தான் இந்த ஏகத்துவ கொள்கையின் தலைவர் என்று இறைவனால் கூறப்படும் இப்ராஹிமின் செயல்கள் அனைத்தையும் உலகம் அழியும் வரை உள்ள முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளான் இறைவன்!
சரி இது மூட நம்பிக்கை இல்லையா ?
தேசியக் கொடிக்கு சல்யுட் அடிக்கிறோம் அது மூட நம்பிக்கையா ?
யாராவது இறந்தால் அதை அரைக் கம்பத்தில் பறக்க விடுவது மூட நம்பிக்கையா ?
அதை தலை கீழாகப் பறக்க விட்டால் தண்டனை என்பது பகுத்தறிவா ?
நீதிமன்றத்தில் நீதிபதி வரும் போதும், பாராளுமன்றத்தில் சபாநாயகர் வரும் போதும் எழுந்து நிற்பதும் பக்கத்திலே ஒருவர் ஒரு கம்போடு நிறுத்தி வைப்பதும், என்ன மாதிரியான நம்பிக்கை ?
யாராவது இறந்து விட்டால் வானத்தை நோக்கி குண்டுகள் முழங்குவது, அவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவது என்ன நம்பிக்கை ?
எப்போதோ வாங்கிய சுதந்திரத்தை நினைவு கூற கோட்டையிலே கொடியேற்றுவது, கதர் அணிவது, காந்தி குல்லா அணிவது , ராட்டை சுற்றுவது, தண்டி யாத்திரை போவது எல்லாம் எதற்கு ?
இதை எல்லாம் சட்டத்தின் பெயரால், தேசத்தின் பெயரால், செய்தால் அது சரி ! இறைவனின் பெயரால் செய்தால் அது மூடநம்பிக்கையா?
/////// இன்னொருவரை வரவேர்க்க வணக்கம் சொல்வது கூட குற்றம், மக்காவிலிருக்கும் கல்லை முத்தினால் புண்ணியம்.////////
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் முகமன் கூறுகின்றனர். நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம். வணக்கம் என்றால் வணங்குதல், அல்லது மரியாதை செய்தல் எனப் பொருள். ஒருவர் வணங்குகிறார் என்றால் மற்றவர் வணங்கப்படுகின்றார். இருவரும் வணக்கம் என்று சொல்லும் போது அது பொருளற்றதாகி விடுகிறது. இருவரும் சம நிலையில் இருக்கும் போதாவது ஏதாவது கூறிச் சமாளிக்க முடியும்.
ஒருவர் மிகவும் மரியாதைக்குரியவராகவும் மற்றவர் தாழ்த்தப்பட்ட நிலையிலும் இருந்தால் உயர்ந்தவர் கூறும் வணக்கம் பொய்யாகி விடுகிறது. உயர்ந்த நிலையில் உள்ளவர், தாழ்ந்தவரை வணங்கவும் மாட்டார். தன்னை விட மேம்பட்டவராக நினைக்கவும் மாட்டார். அது போல் ஆங்கிலக் கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம் கூறும் வழக்கம் பரவிவிட்டது. இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத முகமனாகவுள்ளது.
மனிதர்கள் நல்ல நிலையில் இருப்பது பாதி என்றால் கவலை துன்பம் போன்ற கெட்ட நிலை பாதியாக உள்ளது. மரண வீட்டிலோ நோயாளியிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவனிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது பொருத்தமாக இருக்காது. ஆனால் இஸ்லாம் கூறும் முகமன் பொய் கலப்பில்லாததாகவும் எல்லா நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது. அஸ்ஸலாமு அலை(க்)கும் என்றால் 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்' என்று பொருள். திருமண வீட்டுக்கும் சாந்தி தேவை. மரண வீட்டுக்கும் சாந்தி தேவை. இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. நட்டம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனித வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரிடமும் பயன்படுத்தத் தக்க ஒரே முகமன் ஸலாம் கூறுதல் மட்டுமே. எது நல்லதோ எது உகந்ததோ அதை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.. :)
கல்லை முத்தமிடுவதை கேட்டுள்ளீர்கள்; உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை என தெரியவில்லை; சொல்லப்போனால் அந்த கல்லை முத்தமிடுவது கட்டாயமல்ல!! அனைவராலும் முத்தமிடவும் முடியாது.. இன்னும் அந்த கல்லை முத்தமிடுவதினால் அக்கல்லால் எந்த ஒரு நன்மையோ தீமையோ எங்களுக்கு அது தராது என தான் நம்புகிறோம்.
//////// காளிக்கு உயிர் பலி மூடநம்பிக்கை, மக்காவில் புண்ணியம்.//////////
காளி என்பது யார்? உங்களை படைத்தவரா ? உலகத்தை பிரபஞ்சத்தை படைத்தவரா? அவருக்கு ஏன் ஆயுதம்? யாரை கொள்வதற்கு? நாங்கள் சொல்வது ,உங்களது கடவுள் நம்பிக்கையிலே மூடநம்பிக்கை உள்ளது என்பதே!! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் சரியான நம்பிக்கை என்பது எங்கள் கருத்து!!
இன்னும் நாங்கள் இறைவனுக்காக பலி கொடுக்கவில்லை ..
"இறைச்சியோ ரத்தமோ இறைவனை சென்றடைவது இல்லை என திருக்குர்ஆன் 22:37 சொல்கிறது.." பொதுவாக, பொருளாதாரம் தொடர்பான வணக்கங்களில் அதன் பயன்பாடுகள் ஏழைகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலை. இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசங்கள், இறைச்சிகள் ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும், இறைவன் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன் என்ற (கீழ்படிதல்) உணர்வை மனிதன் பெறுவதும் தான் குர்பானியின் நோக்கமே தவிர கடவுளுக்குப் படைப்பதல்ல என்பதற்கு இந்த வசனம் சான்றாகும்.
/////// மனதை ஒருமுகப்படுத்த ஒரு சிலை வைத்தல் மூட நம்பிக்கை மனதை ஒருமுகப்படுத்த கிப்லாவை நோக்கி நின்னா பகுத்தறிவு. //////////////////
நாங்கள் கிப்லாவை நோக்குவது மனதை ஒருமைபடுத்திடுவதற்கு அல்ல!! தொழுகை எனும் வணக்கத்தை முஸ்லிம்கள் ஓரிடத்தில் கூட்டாக நடத்த வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பலரும் கூட்டாகக் குழுமி வணங்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் அதில் கட்டுப்பாடோ ஒழுங்கோஇருக்காது. அனைவரும் ஒரே திசையை நோக்கியவர்களாக நின்றால் தான் அதில் ஒழுங்குஇருக்கும்.
ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக தொழும் போது கூட ஒழுங்கு அவசியமானது தான். ஒருவர் வடக்கு நோக்கியும் மற்றொருவர் தெற்கு நோக்கியும் இன்னொருவர் கிழக்கு நோக்கியும் வேறொருவர் மேற்கு நோக்கியும் தொழுதால் அதில் கூட ஒழுங்கின்மை தான் வெளிப்படும். இந்த ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகத் தான் ஏதாவது ஒரு திசையை நோக்குமாறு அனைவருக்கும் கட்டளையிட வேண்டி வருகிறது.
ஆக இந்த பதிவு எழுதிய நண்பரின் கேள்வியில் இருந்து இஸ்லாம் பற்றிய அறியாமை மனதில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
ஆக சகோதரரே!! இஸ்லாத்தை பற்றி சரியாக கற்காமல் இஸ்லாத்தை விமர்சிக்காதீர்கள்!!
குறிப்பு: அன்பான முஸ்லிம்மல்லாத நண்பர்களே யாரையும் கொச்சைபடுத்துவதற்கோ கேலி செய்வதற்கோ இப்பதிவு அல்ல!! இஸ்லாம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கான மறுப்பே ஆகும். பிற மதத்தினர் அவர்கள் கடவுள் என நம்புபவர்களை திட்டாதீர்கள் என்றே திருக்குர்ஆன் (6:108) கூறுகிறது.