ஹதீஸ் விளக்கம் – 2
பிரபஞ்சம் படைக்கப்பட்டதை பற்றி குர்ஆன் கூறும்போது ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக பல இடங்களில் கூறியுள்ளது. ஆனால் அதற்கு மாற்றமாக (ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக) ஒரு ஹதீஸ் இருப்பதாக மாற்றார்களில் சிலரால் முன்வைக்கப்படுகிறது .
5379. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, ”வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் , நூர் ஐ (ஓளி/நல்லதை/நேர்வழியை) புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்” என்று கூறினார்கள்.-
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 50.
நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்.
இந்த மேற்கண்ட ஹதீஸை பார்த்த உடனே நமக்கும் அவ்வாறு தோன்றலாம் ,ஆனால் சற்று சிந்தித்தால் , இந்த ஹதீஸ் வெறும் பூமி சார்ந்த விசயங்களை பற்றி மட்டுமே பேசிகிறது. குர்ஆனில் அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியை படைக்க ஆறு நாட்கள் என கூறியிருக்கிறான் . முதலில் ஆறு நாட்கள் கிடையாது ஆறு நீண்ட காலக்கட்டங்கள் .
ஆனால் இந்த ஹதீஸ் பேசுவதோ, வெறும் பூமியை பற்றி தான் . இதிலிருந்து நாம் விளங்குவது . அந்த ஆறு நீண்டகாலக்கட்டங்களுக்குள் நடக்கும் சில குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும் தான் அந்த ஹதீஸ் பேசியுள்ளது. ஆக,இதில் எந்த முரண்பாடுமில்லை .