ஹிதீஸ் விளக்கம் - 1

Tamil • MyIslam24

ஹிதீஸ் விளக்கம் - 1

காலை தொழுகைக்கு எழாமல் யார் உறங்குகிரார்களோ அவர்களுடைய காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான் என்று ஒரு ஹதீஸ் உள்ளது . இதும் பரவலாக மாற்றார்களில் சிலரால் விமர்ச்சிக்கபடும் செய்தி ... ஹதீஸ்களை பொறுத்தவரை பல செய்திகள் நேரடியாகவும் பல செய்திகள் உவமையாகவும் சொல்லபட்டுருக்கும் .

இது பற்றி அனைத்து ஹதீஸ்களையும் ஒன்றினைத்து பார்க்கும் போது:
இரவின் ஆரம்பத்திலேயே தூங்கி விடியும் வரை எழும்பாதவனை பற்றி நபியவர்களிடம் கேட்கபட்டபோது, அவர்கள்:
அவனுடைய காதில் சாத்தான் மூத்திரம் அடித்துவிட்டான் என்று கூறினார்கள்
. ﺑﺎﻝ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﻓﻲ ﺃﺫﻧﻪ
இதன் உண்மை அர்த்தம் என்ன??

காது பற்றி கருதினோமானல்,, அரபு இலக்கியத்தில் காதை மூடுதல் என்பது தூங்க செய்வதை குறிக்கும்!
ﻓﻀﺮﺑﻨﺎ ﻋﻠﻰ # ﺁﺫﺍﻧﻬﻢ ﻓﻰ ﺍﻟﻜﻬﻒ ﺳﻨﻴﻦ ﻋﺪﺩﺍ
எனவே அக்குகையில் பல வருடங்களுக்கு அவர்களது காதுகளை மூடினோம். (18:11)

இங்கே அவர்களை குகையில் தூங்க செய்தோம் என்பது தான் இங்கே அர்த்தம். அதை இலக்கியமாக காதை மூடினோம் என்று அரபியில் கூறலாம்!!

மூத்திரம் அடித்தல் என்றால் என்ன???
ஆரம்ப கால அரபு மொழியில் மூத்தரம் அடித்தல் என்பது, ஏமாற்றுவதை குறிக்கும்!

உதாரணமாக ஒருமனிதனிடம்  தன்னை நம்ப வைத்து ஏமாற்றினால் அந்த காரியத்தை, "அவன் மேல் இவன் மூத்திரம் அடித்துவிட்டான்" என்று சொல்லலாம்!

தமிழில் "முதுகில் குத்துதல்" என்பதை போவே மூத்திமடித்தல் என்ற அரபு வார்த்தை!!
மேலும் ஒரு நல்ல காரியத்தை கெடுத்து போடுவதையும் இது குறிக்கும்!!

காதில் மூத்திரம் அடித்தல் என்றால் என்ன??
காதில் மூத்தரம் அடிப்பதாக கருதினால், காது மூத்திரத்தால் மூடப்படும்.. இதை மேலே கூறியவற்றிலிருந்து பாரத்தால்,,,
இவன் ஏமாற்றப்பட்டு அல்லது சீர்கெடுக்கபட்டு தூங்க வைக்கபடுகிறான்!!
அதாவது சாத்தான் இவனை ஏமாற்றி அல்லது சீர் கெடுத்தி தூங்க வைத்துவிட்டான் என்பதே இதன் அர்த்தமாகும்!!

இதை நபியவர்கள் இலக்கியமாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கு நேரடி அர்த்தமில்லை. - - - - - - - - -

முஸ்லிம்களுக்கு அதிகாலை தொழுகை கட்டாயமானது அதை அதற்குரிய நேரத்திலே தான் தொழ வேண்டும். அது மட்டுமல்ல அதிகாலையில் எழும்புவர்களுக்கு அபிவிருத்தி ஏற்பட நபியவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள்!
ஒருவன் இவற்றை தவறவிடும்போது அவன் நஷ்டமடைகிறான். இவன் இவற்றை தவறவிட்டு இரவின் ஆரம்பத்திலே தூங்கியிருந்தால் இவன் சாத்தானால் ஏமாற்றபட்டவனாக கருதப்படுகிறான். அதை தான் நபி கூறினார்!!